Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைத் தேயிலையில் பூச்சித் தாக்கம் இல்லை!

In இலங்கை
Published: 12:10 GMT, Dec 18, 2017 |
0 Comments
1203
This post was written by : Ravivarman
TEA RESEARCH BOARD CHAIRMAN

இலங்கையில் தேயிலை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும்  விற்பனையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் எம்.எம்.ஜே.பி. கவரம்மன தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் தேயிலைப் பிரச்சினை குறித்து இன்று (திங்கட்கிழமை) எமது ஊடகவியலாளர் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தேயிலையில் ஒரு வகை பூச்சி தாக்கம் இருப்பதாக ஊடகங்கள் ஊடாக பரவலாக அறிய முடிகின்றது. ஆனால் எம்மை பொறுத்த வரையில் அவ்வாறான ஒரு பூச்சியின் தாக்கம் இருப்பதாக தெரியவில்லை.  இந்த கெப்ரா என்ற பூச்சி இனம் இலங்கையிலும், தேயிலை மலைகளிலும் இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த பூச்சி இனம் தேயிலைகளில் இல்லையெனவும், தேயிலையை ரஷ்யாவிற்கு ஏற்றிச் சென்ற கொள்கலன்களிலே இந்த பூச்சி வகை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அவ்வாறு நடைபெற்றாத என்பது தொடர்பில் தெளிவாக கூற முடியாது.

எனினும் இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கை தேயிலைத்துறைக்கு இது புதியதொரு பிரச்சினை தான் என்று சொல்ல வேண்டும். ஆகவே இந்தப் பிரச்சனை தொடர்பிலும், பூச்சி இனம் எவ்வாறு ஊடுருவியது என்பதையும் கண்டறிவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆய்வுகளின் பின்னர் இதற்கு சரியான தீர்வை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதுவரையில் தேயிலைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் உறுதியான கருத்துகளைக் கூற முடியாது.எனினும் இதனால் இலங்கை த்தேயிலைத் துறைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படபோவதில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg