Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காலாவதியாகிய நிறப்பூச்சுக்கள் சந்தையில்! – ஒருவர் கைது

In இலங்கை
Published: 12:38 GMT, Dec 18, 2017 |
0 Comments
1202
This post was written by : Varshini
paint

காலாவதியான நிறப்பூச்சுக்களை சந்தையில் விற்பனைக்கு அனுப்பிய ஒருவர், பொலனறுவையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நுகர்வோர் அதிகார சபையினரால் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலனறுவை குறுப்பு சந்தி எனும் பகுதியில், இவ்வாறு காலாவதியான நிறப்பூச்சுக்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபாய் என நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் காலாவதியான நிறப்பூச்சுக்களின் லேபல்களை மாற்றி, எதிர்வரும் 2019ஆம் ஆண்டுவரை திகதியிடப்பட்டு இவை விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

விசாரணையின் பின்னர் சந்தேகநபரை பிணையில் விடுவித்த நுகர்வோர் அதிகார சபையினர், அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg