Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு அரசியல் விழிப்பூட்டும் செயற்திட்டம்!

In இலங்கை
Published: 13:21 GMT, Dec 18, 2017 |
0 Comments
1123
This post was written by : Surenth
Vavuniya

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு அரசியல் ரீதியில் விழிப்பூட்டும் செயற்திட்டம் ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஒன்றிணைந்து பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் குழுவினால் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், பெண்கள் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி எமல்டா சுகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டிந்தார். இதன்போது, உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடவுள்ள பெண்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறான விழிப்பூட்டும் செயலமர்வு நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதன் ஒரு கட்டமாகவே வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg