Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவின் ஐந்து சபைகளுக்கு மூன்று கட்டங்களாக ஐக்கிய தேசியக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது!

In இலங்கை
Published: 17:11 GMT, Dec 18, 2017 |
0 Comments
1194
This post was written by : Surenth
IMG_7954

வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து சபைகளில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி இன்று (திங்கட்கிழமை)மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் மூன்று கட்டங்களாக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

இதன்படி, வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து சபைகளில் முதல் கட்டமாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதில், வெண்கல செட்டிகுளம் பிரதேச சபைக்கு வர்த்தக கைத்தொழில் அமைச்சரின் இணைப்பாளர் முகைதீன் தலைமையிலும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய இரு சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ம.ஜெயதிலக, ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, வவுனியா வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மு.சுப்பிரமணியம், இணை ஒருங்கிணைப்பாளர் தம்பாபிள்ளை பிறமேந்திர ராஜா ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை என்பவற்றுக்கான கட்டுப்பணத்தை அமைச்சர் றிசாட் பதியுதீனின் இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான அப்துல் பாரி தலைமையிலான குழுவினரும் செலுத்தியிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg