Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டமைப்பின் கூட்டத்தில் இருந்து சித்தார்த்தன் வெளியேறினார்?

In இலங்கை
Updated: 17:30 GMT, Dec 18, 2017 | Published: 17:30 GMT, Dec 18, 2017 |
0 Comments
1680
This post was written by : Surenth

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான ஆசனப் பங்கீட்டில் புளொட் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கூட்டம் யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் இன்றிரவு (திங்கட்கிழமை) ஏழு மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைத்து மன்றங்களிலும் தமிழ் அரசுக் கட்சிக்கு 60 சதவீதமும் ரெலோ, புளொட் கட்சிகளுக்கு தலா 20 சதவீதமும் ஆசன ஒதுக்கீடு வழங்கப்படும் என பங்காளிக் கட்சிகளின் தலைமைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், யாழ்ப்பாண மாநகர வட்டாரங்களின் அடிப்படையில் புளொட் கட்சிக்கு இரண்டு வட்டாரங்கள் மாத்திரம் தமிழ் அரசுக் கட்சியால் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்குச் சேர வேண்டிய மேலும் மூன்று வட்டாரங்கள் ரெலோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் இடம்பெற்ற பேச்சுக்கள் திருப்தியளிக்காத நிலையில் கூட்டத்திலிருந்து இன்றிரவு சற்றுமுன்னர் புளொட் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்தன் வெளியேறியுள்ளார்.

இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனுடன் ஆதவனின் செய்திப் பிரவு தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg