Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்காவின் ஆளும் காங்கிரஸ் தலைவராக சிரில் ரமபோசா

In
Updated: 05:07 GMT, Dec 19, 2017 | Published: 05:07 GMT, Dec 19, 2017 |
0 Comments
1216
This post was written by : Suganthini

தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்கு (ஏ.என்.சி.) புதிய தலைவராக, தற்போதைய துணை ஜனாதிபதியான சிரில் ரமபோசா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்கு புதிய தலைவரைத் தெரிவுசெய்யும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. தலைவர் பதவிக்கு, 7 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், முக்கிய வேட்பாளர்களாக துணை ஜனாதிபதி சிரில் ரமபோசாவும் முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி ஜேக்கப் ஷுமாவின் முன்னாள் பாரியாருமான நொக்காசன டலாமினி ஷுமாவும் காணப்பட்டனர்.

இதன்போது, சிரில் ரமபோசா 2 ஆயிரத்து 440 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற அதேவேளை, நொக்காசன டலாமினி 2 ஆயிரத்து 261 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார்.

மேலும், வாக்குகளை மீள எண்ணுமாறு டலாமினியின் தரப்பினர் கோரியதையடுத்து, முடிவு தாமதமாகி வெளியிடப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014 ஆண்டு முதல் தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதியாகப் பதவி வகித்துவரும் சிரில் ரமபோசா, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஜனாதிபதியாவதற்கு பலமான நிலை காணப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரைகாலமும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்துவந்த ஜனாதிபதி ஷுமா, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நிலையிலேயே, அக்கட்சிக்குப் புதிய தலைவர் தெரிவு நடைபெற்றது.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருந்துவரும் ஷுமா, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்வரை, ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஐந்தாண்டுகளைக் கொண்ட ஜனாதிபதிப் பதவியை இரண்டு தடவைகளுக்கு மேல் வகிக்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg