Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டனில் முதலாவது பெண் ஆயர் நியமிக்கப்பட்டார்

In
Updated: 07:00 GMT, Dec 19, 2017 | Published: 07:00 GMT, Dec 19, 2017 |
0 Comments
1281
This post was written by : Suganthini

லண்டனின் முதல் பெண் ஆயராக  சாரா முல்லாலி (Sarah Mullally)    சேர்ச் ஒப் இங்கிலாந்து திருச்சபையினால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயராக முதற்தடவை பெண்ணொருவர் லண்டனில் நியமிக்கப்பட்ட பெருமையையும் இவர் பெறுகின்றார்.

133ஆவது ஆயராக  நியமிக்கப்பட்டுள்ள சாரா, இதற்கு முன்னர் தாதி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்திருந்தார். கடந்த 2001ஆம் ஆண்டு தலைமைத் தாதி உத்தியோகத்தராக இவர் நியமிக்கப்பட்டபோது, மிகக் குறைந்த வயதில் அப்பொறுப்புக்கு வந்தவரென்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

1994ஆம் ஆண்டு முதல் பெண் மதபோதகர்களை  சேர்ச் ஒப் இங்கிலாந்து  அங்கீகரித்து  வருகின்றது. இருப்பினும், பழமைவாதிகளின் எதிர்ப்புக் காரணமாக ஆயராக பெண்களை திருநிலைப்படுத்த முடியாத நிலைமை இதுவரைகாலமும் காணப்பட்டுவந்தது.

கடந்த 2012ஆம், 2014ஆம் ஆண்டுகளில் ஆயராகப் பெண்களை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டபோது, அதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்ததால் அத்தீர்மானம் அப்போது   கைவிடப்பட்டிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg