Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வறண்ட உதட்டிற்கு தேங்காய் எண்ணெயின் தீர்வு!

In
Updated: 11:38 GMT, Dec 19, 2017 | Published: 11:38 GMT, Dec 19, 2017 |
0 Comments
1142
This post was written by : Risha

குளிர் காலத்தில் உங்கள் உதடுகள் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு அழகற்று காணப்படுகின்றதா? அப்பிரச்சினைக்கு இதோ எளிதான தீர்வு…

உங்கள் உதடுகளை சீர்செய்வதற்கு சிறந்த மருந்து தேங்காய் எண்ணெய். எண்ணெய் உதடுகள் வறண்டு போவதை குறைத்து, உதட்டுக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கும்.

உதடு வறண்டு போகும்போது அவ்வப்போது உதட்டில் தேங்காய் எண்ணெய்யை தடவ வேண்டும். குளிர்காலங்களில் இதனை பயன்படுத்தி சிறந்த பலனை பெறலாம்.

இதேவேளை, படுக்கைக்கு செல்லும் முன்னர் உதட்டில் தேங்காய் எண்ணெய்யை பூசிக்கொண்டு உறங்க வேண்டும். பின்னர் காலையில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தேங்காய் எண்ணெய்யுடன், ஒலிவ் எண்ணெய்யை கலந்து உதட்டில் பூசி வந்தாலும் சிறந்த பயன் கிட்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg