Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எல்லைக்குள் அத்துமீறிய வடகொரிய ராணுவ வீரரை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு

In
Updated: 05:09 GMT, Dec 21, 2017 | Published: 05:09 GMT, Dec 21, 2017 |
0 Comments
1967
This post was written by : Risha

தென்கொரிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த வடகொரிய ராணுவ வீரரை நோக்கி, தென்கொரிய ராணுவத்தினர் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

காணாமல்போன சக ராணுவ வீரரரை தேடி தமது எல்லைக்குள் வடகொரிய வீரர் அத்துமீறிய நிலையிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தென்கொரிய ராணுவத்தினர் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளனர்.

எல்லை அருகே வடகொரிய வீரரை நோக்கி 20 எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை வேளையில் வடகொரிய ராணுவத் துருப்புகள் எல்லையூடாக ஊடுருவுவது கண்காணிப்பு சாதனங்கள் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி தமது பாதுகாப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், அவர்களது ஊடுருவலுக்கான காரணம் குறித்தும் ஆராயப்பட்டது என தென்கொரியாவின் கூட்டுத் தலைவர்களின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டில் எல்லையில் அத்துமீறிய நான்காவது வீரர் இவராகும். இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg