Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நள்ளிரவில் உக்கிர தாக்குதல்: இட்லிப்பில் 19 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 06:07 GMT, Dec 21, 2017 | Published: 06:07 GMT, Dec 21, 2017 |
0 Comments
1421
This post was written by : Risha

சிரியாவின் கிளர்ச்சி வலயமாகக் கருதப்படும் இட்லிப் மாகாணத்தில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 7 சிறுவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இட்லிப் மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 25 பேர் காயமடைந்ததுள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரிய அரசாங்கம் அல்லது ரஷ்ய படையினராலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கண்காணிப்பு அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், கிளர்ச்சியாளர்களை மாத்திரமே தாம் இலக்கு வைப்பதாக தொடர்ந்து தெரிவித்துவரும் சிரிய ராணுவம் மற்றும் மொஸ்கோ ஆகிய இரு தரப்புகளும், கண்காணிப்பு அமைப்பின் குற்றச்சாட்டிற்கு இதுவரை பதிலளிக்கவில்லை.

2015ஆம் ஆண்டு மாகாண தலைநகரத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, டமாஸ்கஸ் அரசாங்கம் இட்லிப்பை இழந்தது.

அது முதல் எதிர்த்தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே மாகாணமாக இட்லிப் மாறியுள்ளதுடன், சிரியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட கிளர்ச்சியாளர்களின் முற்றுகைக்கு உட்பட்ட பகுதியாகவும் இட்லிப் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg