Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவின் நீண்டகால கடற்படை மர்மம் தீர்ந்தது!

In
Published: 07:02 GMT, Dec 21, 2017 |
0 Comments
1232
This post was written by : Risha
9278808-3x2-700x467

முதலாம் உலகப் போரின்போது காணாமல்போன அவுஸ்ரேலியாவின் முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் 103 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியாவின் யோர்க் தீவுப் பகுதியில், நீர் மட்டத்திலிருந்து 300 மீற்றர் ஆழத்தில் குறித்த கப்பல் நேற்று (புதன்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மிக நீண்டகால குறித்த கப்பல் தொடர்பாக நீடித்துவந்த மர்மம் தீர்ந்துள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

35 கப்பல் பணியாளர்களுடன் பயணித்த HMAS AE1 என்ற நீர்மூழ்கிக் கப்பாலனது, பப்புவா நியூ கினியாவின் யோர்க் தீவுப் பகுதியில், கடந்த 1914ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காணாமல் போனது.

காணாமல் போன குறித்த கப்பலை கண்டுபிடிப்பதற்காக 12 தனியார் மற்றும் அரசாங்க ஆய்வுப் பயணங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அவை அனைத்தும் தோல்வியடைந்தன.

இந்நிலையில், 13ஆவது ஆய்வு பயணம் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போதே குறித்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5868548-3x2-700x467

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg