Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவில் உள்நாட்டு சந்தைக்கான கார் உற்பத்தி வீழ்ச்சி

In
Updated: 10:19 GMT, Dec 21, 2017 | Published: 10:19 GMT, Dec 21, 2017 |
0 Comments
1291
This post was written by : Risha

பிரித்தானியாவில் உள்நாட்டு சந்தைக்கான கார் உற்பத்தியானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதத்திற்கான கார் உற்பத்தியானது 4.6 வீதத்தினால் வீழ்ந்துள்ளதாகவும், உள்நாட்டு கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரெக்சிற் நிச்சயமற்ற தன்மை மற்றும் டீசல் வரி விதிப்பு மீதான குழப்பம் என்பனவும் இந்த வீழ்ச்சியில் தாக்கம் செலுத்தியுள்ளது. அதன்படி உள்நாட்டு சந்தை உற்பத்தியானது 28.1 வீதத்தினால் சரிந்துள்ளது.

இதேவேளை, ஏற்றுமதிக்கான உற்பத்தியானது 1.3 வீதத்தினால் அதிகரித்துள்ளது. மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் சங்கத்தின் தரவுகளின்படி, பிரித்தானியா தொழிற்சாலைகளில் நொவம்பர் மாதத்திற்காக 1 லட்சத்து 61 ஆயிரத்து 490 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தன.

அவற்றில் 24 ஆயிரத்து 276 கார்கள் மாத்திரமே உள்நாட்டு சந்தைக்கான உற்பத்தியாகும். எஞ்சிய 1 லட்சத்து 37 ஆயிரத்து 214 கார்கள் ஏற்றுமதிக்கானவையாகும்.

உள்நாட்டு சந்தைக்கான உற்பத்தியானது தொடர்ந்து நான்காவது மாதமாகவும் இம்முறை வீழ்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg