Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்ப்பாணத்து வெங்காயத் தோசை!

In
Updated: 11:32 GMT, Dec 21, 2017 | Published: 11:28 GMT, Dec 21, 2017 |
0 Comments
1297
This post was written by : Kemasiya
fjfjnc f

வெங்காயத் தேசையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் வகையில், சுவையாக செய்வது எப்படி என நோக்கலாம்.

தேவையான பொருட்கள்

உளுந்து-  1\2 கப்

கடலை- 1\2 கப்

அரிசி-1 கப்

பாதாம்-  1\4 கப்

வெங்காயம்

பச்சைமிளகாய்

கருவேப்பிலை

செய்முறை

உளுந்தினை ஊறவைத்து கழுவிக்கொள்ள வேண்டும். அதேபோன்று அரிசி, கடலை, பாதாம், என்பவற்றையும் தனித்தனியாக கழுவி கொள்ளுதல் வேண்டும். பின்னர் தனித்தனியாக அரைத்தெடுத்து, அதன்பின்னர் ஒன்றாக கலந்து கொள்ளுதல் வேண்டும்.

குறித்த கலவையை 9மணித்தியாளங்கள் புளிக்கவைத்துக்கொள்ள வேண்டும். புளிப்பதற்கு பனம்கள்ளு (உடன்கள்ளு விட்டால் சிறந்ததும் ஆரோக்கியமானதுமாகும்) விட்டு கலந்துகொள்ள வேண்டும்.

பின்னர் குறித்த கலவையினை எடுத்து மீண்டும் கறண்டியால் கலந்து, தோசை மா பதத்திற்கு (தண்ணீர்த்தன்மை இறுக்கமான தன்மை சேர்ந்த பதம்) தண்ணீர் அல்லது இளநீர் சேர்த்து கரண்டியால் கலந்து கொள்ள வேண்டும்.

அதன்பின்னர் தோசை வார்ப்பதை போன்று வார்த்து அதன் மேல் அரிந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாய் கருவேப்பிலையை தூவி வேகவிட்டு வெங்காயம், பச்சைமிளகாய் தோசை மாவுடன் ஒட்டிக்கொண்டதும் மறுபக்கம் திருப்பி வேகவைக்க வேண்டும்.

நன்றாக வெந்ததும் இறக்கி, பச்சைமிளகாய் சம்பல் அல்லது தேன் சேர்த்து உண்ண சுவை மிகுதியாக இருக்கும்.

குறிப்பு – குழந்தைகளுக்கு பச்சை மிளகாய் உறைப்பாக இருக்கும் என்பதால் பிளம்ஸ் அல்லது கரட் சேர்த்துக்கொள்ளலாம்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg