Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலையில் மொத்தமாக 66 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன!

In இலங்கை
Updated: 14:09 GMT, Dec 21, 2017 | Published: 14:09 GMT, Dec 21, 2017 |
0 Comments
1097
This post was written by : Puvanes
trinco001

திருகோணமலையில் 2ஆம் கட்ட வேட்புமனு நியமனத்தில் தாக்கல் செய்யப்பட்ட 66 வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதான தெரிவித்தாட்சி அதிகாரி என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

திருகோணமலை உள்ளூராட்சிசபை தேர்தல் வேட்புமனுத்தாக்கல் நிறைவுபெற்றது தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, திருகோணமலை ஆகிய நகரசபைகளுக்கும், மொரவௌ பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, கந்தளாய் பிரதேசசபை ஆகிய 6 உள்ளூர் அதிகாரசபைகளுக்கும் கடந்த 18ஆம் திகதி முதல் இன்று 12 மணிவரை வேட்புமனு கோரப்பட்டிருந்தது.

இதன்போது அங்கீகரிக்கப்பட்ட 61 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தன. அவற்றுள் 59 அரசியல் கட்சிகள் மற்றும் 07 சுயேட்சை குழுக்கள் உட்பட மொத்தமாக 66 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கட்டுப்பணம் செலுத்திய 2 கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. கந்தளாய் பிரதேச சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஒரு வேட்பாளரும் கிண்ணியா நகர சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த ஒரு வேட்பாளரும் கந்தளாய் பிரதேச சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை குழுவை சேர்ந்த ஒரு வேட்பாளரின் பெயரும் நிராகரிக்கப்பட்டதாகவும் புஸ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg