Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை! – கௌதம் கம்பீர்

In
Updated: 04:53 GMT, Dec 22, 2017 | Published: 04:53 GMT, Dec 22, 2017 |
0 Comments
1736
This post was written by : Sujitharan

சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற மாட்டேன் என, இந்திய அணி வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ரஞ்சி கிண்ண கிரிக்கட் போட்டியில் டெல்லி அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுளளது.

இந்த தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் கௌதம் கம்பீர் இந்த பருவக்காலத்தில் 8 போட்டிகளில் 3 சதம், 2 அரைசதம் உட்பட 632 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

”சர்வதேச கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் எனக்கு இல்லை. என்னிடம் திறமையும், உத்வேகமும் இல்லை எனத் தெரியும் போது நானே கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்று விடுவேன்.

இதற்காக, அணி தேர்வாளர்களிடம் நான் பேச மாட்டேன். தேர்வாளர்களிடம் பேச வேண்டிய அவசியமும் எனக்கில்லை. ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.

எந்தவொரு கிரிக்கட் வீரரும் தொடர்ந்து ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டே இருக்வேண்டும். எம் கையில் இருக்கும் துடுப்பினைக் கொண்டு ஓட்டங்களைக் குவிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது. நான் கடந்த இரு ஆண்டுகளாக சிறப்பாக செயற்பட்டு வருகிறேன். புது உத்தேவத்துடன் துடுப்பெடுத்தாடுகிறேன்.

எங்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பது உண்மையிலேயே சாதனை தான். இன்னும் ஒரு அடி முன்னேறி 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஞ்சி கிண்ணத்தை வென்றால் சிறப்பானதாக இருக்கும்” என்றும் கூறினார்.

36 வயதான கௌதம் கம்பீர் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg