Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெல்பேர்னில் பாதசாரிகள் மீது தாக்குதல்- 19 பேர் காயம்

In
Published: 07:19 GMT, Dec 22, 2017 |
0 Comments
1256
This post was written by : Elakkiya

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் பாதசாரிகள் மீது திட்டமிட்டு காரால் மோதி தாக்குதல் நடத்தப்பட்டதில் 19 பேர் காயமடைந்துள்ளதாக பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெல்பேர்ன் நகரின் மத்தியில் சனநெருக்கடி மிகுந்த பிலின்டர்ஸ் வீதியில் நேற்று (வியாழக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஏழுபேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுடன் தொடர்புடையதாக 32 வயதுடைய ஆப்கானிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்ரேலிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறிருக்க குறித்த தாக்குதலானது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்றும் தாக்குதல்தாரி போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஏற்கனவே பொலிஸாருக்கு பரீட்சயமானவர் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தாக்குதல்தாரி மனநோயாளி என்ற நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மெல்பேர்னில் நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சிகரமானது என அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் அரசியல் பிரச்சினையோ அல்லது பயங்கரவாதமோ தாக்குதலுக்கு காரணமாக அமையவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தாக்குதலில் காயமடைந்தவர்களில், தென்கொரியா, சீனா, இத்தாலி, இந்தியா, வெனிசுவேலா, அயர்லாந்து மற்றும் நியூஸிலாந்தைச் சேர்ந்த ஒன்பது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்குவதாக பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

_99311182_melbourne_attack_map640-nc
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg