Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் கொரியாவில் உடற்பயிற்சி மையத்தில் தீவிபத்து: 29 பேர் உயிரிழப்பு

In
Updated: 09:11 GMT, Dec 22, 2017 | Published: 09:11 GMT, Dec 22, 2017 |
0 Comments
1193
This post was written by : Anojkiyan

தென் கொரிய நகரமான ஜெசோன் நகரில் உள்ள எட்டுமாடி உடற்பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், 29 பேர் உடல்கருகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த தீவிபத்தில் படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென அஞ்சப்படுகின்றது.

கட்டத்தின் அடிப்பகுதியில் உள்ள கார் தரிப்பிடத்தில் உள்ள காரில் ஒன்றிலேயே குறித்த தீ பரவத்தொடங்கியதாகவும், அதன்பின்னர் முழு கட்டத்திற்கும் குறித்த தீ பரவியதாகவும் ஜெசோன் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இத்தீ விபத்து குறித்து அதிகாரிகள் தீவிரவிசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg