Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கானில் பொலிஸ் தலைமையகம் மீது கார்குண்டு தாக்குதல்: ஆறு பொலிஸார் உயிரிழப்பு

In
Updated: 10:00 GMT, Dec 22, 2017 | Published: 10:00 GMT, Dec 22, 2017 |
0 Comments
1111
This post was written by : Anojkiyan

தெற்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் ஆறு பொலிஸார் கொல்லப்பட்டதோடு, நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காந்தஹார் மாகாணத்தின் மாய்வந்த் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரும் உள்ளூர் பொலிஸார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இதேவேளை மேற்கு ஹெராட் மாகாணத்தில் ஷியா அருகாமையில் நேற்று நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக காந்தகார் பொலிஸ் தலைவரான அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg