Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலை வெல்கம்விகாரை மக்கள் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Published: 06:34 GMT, Dec 23, 2017 |
0 Comments
1085
This post was written by : Vithushagan

திருகோணமலை வெல்கம்விகாரை பகுதியில் உள்ள மக்கள் தமது பகுதியில் அரசினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட யானை வேலிகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெல்கம்விகாரை பகுதியில் இருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டப் பேரணியாக கன்னியா பகுதி திண்மக்கழிவுகள் அகற்றும் நிலையத்திற்கு முன்பாக வந்தடைத்த கிராம வாசிகள் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட யானை வேலியிடும் பணிகளை முன்னைய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்த ஒருவர் குறித்த குத்தகையினை தனியார் ஒருவரிடம் கொடுத்ததாகவும் அதன் காரணமாக தமக்கு பாதுகாப்பற்றதும் தரமற்றதுமான யானை வேலிகள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக தெரிவித்த கிராம வாசிகள் அவற்றை உடனடியாக அகற்றி பாதுகாப்பான யானை வேலிகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg