Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனுஸ்தீவு குடியேற்றவாசிகளை அவுஸ்ரேலியா பொறுப்பேற்க வலியுறுத்து

In
Updated: 06:49 GMT, Dec 23, 2017 | Published: 06:49 GMT, Dec 23, 2017 |
0 Comments
1332
This post was written by : Suganthini

மனுஸ்தீவில் கைவிடப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை, அவுஸ்ரேலிய அரசாங்கம் பொறுப்பேற்ற வேண்டுமென, ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் சிசில் பௌலே (Cecile Pouilly) வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஐ.நா.வின் கூட்டத்திலேயே, அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இப்புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக அவர் தெரிவித்தபோது, ‘மனுஸ்தீவு தடுப்பு முகாமிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை, அவுஸ்ரேலிய அரசாங்கம் கைவிட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது’ என்றார்.

‘ஆபத்தான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ள இப்புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுகின்றன. அத்துடன், இவர்களின் பிரச்சினைக்குத் உரிய தீர்வு காணப்பட வேண்டுமென்பதுடன், அவர்களை அவுஸ்ரேலியாவில்  தங்கவைக்க முடியும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

மனுஸ்தீவு தடுப்புமுகாமை அவுஸ்ரேலிய அரசாங்கம்  கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி  மூடியதுடன், அம்முகாமிலிருந்து சுமார் 800 பேரையும் வெளியேறுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில், அம்முகாமிலிருந்த 150 பேர் மாத்திரம் மாற்று முகாமொன்றுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அதேவேளை, ஏனையோர் அம்முகாமிலிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்து தொடர்ந்து அம்முகாமிலேயே தங்கியுள்ளனர். இவ்வாறான நிலையில், முகாமில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

புகலிடக் கோரிக்கையாளர்களின் ஆபத்தான கடல் வழிப் பயணத்தை தடுக்கும் நோக்கிலும் மனிதக் கடத்தலை தடுக்கும் நோக்கிலும் மனுஸ்தீவு தடுப்பு முகாமை மூடுவதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg