Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டன் மிருக்காட்சிச்சாலையில் தீ

In
Updated: 09:53 GMT, Dec 23, 2017 | Published: 09:53 GMT, Dec 23, 2017 |
0 Comments
1335
This post was written by : Suganthini

லண்டனிலுள்ள மிருகக்காட்சிச்சாலை ஒன்றில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் நடவடிக்கையில், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் தீயணைப்புப் படை வீரர்கள் போராடி வருகின்றனர்.

லண்டனிலுருள்ள மிருகக்காட்சிச் சாலையில் இன்று (சனிக்கிழமை) காலை திடீரெனத் தீ ஏற்பட்டுள்ளது. மிருகக்காட்சிச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள கடைகளே தீக்கிரையாகியுள்ளன.

இந்தத் தீயை அணைப்பதற்காக தீயணைப்புப் படை வீரர்கள் 70 ஆயிரம் பேர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.  இருப்பினும்,  தீயை அணைக்கும் நடவடிக்கையில், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் தீயணைப்புப் படை வீரர்கள் போராடி வருகின்றனர்.

இதன்போது, எவரும் எரிகாயங்களுக்கு உள்ளாகியமை தொடர்பாகவோ, மிருகங்கள் தீயில் அகப்பட்டமை தொடர்பாகவோ எதுவித தகவலும் இதுவரையில் தெரியவரவில்லையென, தீயணைப்புப் படை வீரர்கள் கூறியுள்ளனர்.

 இந்தத் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லையெனவும், அவர்கள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg