Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீயில் அகப்பட்டு அரியவகை விலங்கினம் இறப்பு

In
Updated: 09:26 GMT, Dec 24, 2017 | Published: 09:26 GMT, Dec 24, 2017 |
0 Comments
1257
This post was written by : Suganthini

லண்டனிலுள்ள மிருகக்காட்சிச் சாலையொன்றில் தீ விபத்துக் காரணமாக, அரியவகை விலங்கினமொன்று இறந்துள்ளதுடன், சில விலங்கினங்கள் காணாமல் போயுள்ளதாக, மிருகக்காட்சிச் சாலை ஊழியரொருவர் தெரிவித்துள்ளார்.

10 வயது நிரம்பிய aardvark  எனும் விலங்கினமே இறந்துள்ளது. இதேவேளை, 4 meerkats காணாமல் போயுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

மேற்படி மிருகக்காட்சிச் சாலையில் நேற்று (சனிக்கிழமை) எதிர்பாராத வகையில் தீ பரவியுள்ளது. இத்தீயை அணைப்பதற்காக தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் 70 ஆயிரம் பேர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், இந்தத் தீ விபத்தில் எரிகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 8 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்தத் தீ விபத்தையடுத்து மூடப்பட்ட மிருகக்காட்சிச் சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg