Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முட்டை போடாது சொக்லேட் கேக் செய்வது எப்படி?

In
Published: 09:59 GMT, Dec 24, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Kemasiya
bcddf

தேவையான பொருட்கள்

கோதுமை மா – 100கிராம்

கொக்கோ பவுடர்- 40கிராம்

சோளம் மா – 50கிராம்

சீனி – 150கிராம்

வானீலா எசென்ஸ் – 1 தே.க

எண்ணெய் – 120

பால் -120 எம்

பீட்ரூட் (துருவியது) -100 கிராம்

உப்பு – 1/2 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி

பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி

ரின்பால் – 4/3 ரின்

வெண்ணெய் – 2 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
செய்முறை

எண்ணெய் மற்றும் வெண்ணெய் ரின்பால் ஆகியவற்றை சேர்த்து சிறிது சிறிதாக பால் சேர்த்து அடித்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து சீனியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இதனுடன் எழுமிச்சம் சாற்று மற்றும் உப்பு என்பவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கோதுமை மா கொக்கோ பவுடர் சோளம் மா பேக்கிங் பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாக மூன்று தடவைகள் அரித்தெடுக்க வேண்டும்.

தொடர்ந்து முதல் கலவைக்குள் இந்த மாக்கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.

அதனுடன் பீட்ரூட் கலவையையும் சேர்த்து வானீலா விட்டு கலந்து கே் பாத்திரத்தில் இட்டு 150 மில்லி வெப்பத்தில் வேக் செய்து எடுக்க வேண்டும்.

சுவையான முட்டை சேர்க்காத சொக்லேட் கேக் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg