Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸில் பாதுகாப்புத் தீவிரம்

In ஐரோப்பா
Updated: 12:30 GMT, Dec 24, 2017 | Published: 12:29 GMT, Dec 24, 2017 |
0 Comments
1249
This post was written by : Suganthini

பிரான்ஸில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கான சாத்தியம் காணப்படும் நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்   இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் வர்த்தக நிலையங்கள், பொதுவிடங்கள், சுற்றுலாத்தளங்கள், மதத்தலங்கள், சந்தைகள் ஆகிய முக்கிய இடங்களுக்கு வருகைதரும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் படை வீரர்கள் கடமையில் ஈடுபட்டு வருவதாக, பிரான்ஸ் உட்துறை அமைச்சு கூறியுள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவும் இச்சூழ்நிலையில், மேலதிக பொலிஸாரின் ஒத்துழைப்புத் தேவைப்படுவதாகவும், அவ்வமைச்சு கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg