Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரூந்து மோதியதில் பாதயாத்திரிகர்கள் அறுவர் பரிதாப மரணம்!

In இந்தியா
Updated: 05:54 GMT, Dec 26, 2017 | Published: 05:31 GMT, Dec 26, 2017 |
0 Comments
1169
This post was written by : Varshini
palani pilgrims

பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றுகொண்டிருந்த பக்தர்கள் மீது அரச பேரூந்து மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

பழனி முருகன் கோயிலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திருப்பூரைச் சேர்ந்த சுமார் 40இற்கும் அதிகமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். இதன்போது மதுரை நோக்கி வேகமாகச் சென்ற பேரூந்து, தாராபுரம் பகுதியில் யாத்திரிகர்கள் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மார்கழி மாத பனிமூட்டம் அதிகாலையில் அதிகமாக காணப்பட்டதால், எதிரே வந்த பக்தர்களை அடையாளம் காண முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்திய பேரூந்தின் சாரதியும் நடத்துனரும் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை தேடி தாராபுரம் பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg