Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹைஹுண்டாய் நிறுவனத்தின் தற்காலிக ஊதிய ஒப்பந்தம் நிராகரிப்பு

In வணிகம்
Updated: 06:59 GMT, Dec 26, 2017 | Published: 06:59 GMT, Dec 26, 2017 |
0 Comments
1113
This post was written by : Risha
hy

தென்கொரிய கார் உற்பத்தியாளரான ஹைஹுண்டாய் மோட்டார் நிறுவன நிர்வாகத்துடன், தலைமைத்துவம் கடந்த வாரம் ஒப்புகொண்ட தற்காலிக ஊதிய ஒப்பந்தத்தை, தொழிற்சங்கத்தினர் நிராகரித்துள்ளனர்.

தொழிற்சங்கத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 45 ஆயிரத்து 8 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 50.2 வீதமானோர் ஒப்பந்தத்தை நிராகரித்து வாக்களித்துள்ளனர்.

கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்துடன் ஒப்பிடுகையில் ஊதிய அளவுகள் போதுமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 48.2 வீதமானோர் ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்ததுடன், ஏனையவை செல்லுபடியாகாதவையாகும்.

இந்நிலையில், இவ்வாண்டுக்குள் புதிய சிறந்த தற்காலிக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என தொழிற்சங்கத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இதேவேளை, தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இவ்வருட ஆரம்பத்தில் இணக்கமான உடன்படிக்கை ஏற்படுத்தப்படும் என ஹைஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg