Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சபரிமலையில் தங்க அங்கியுடன் அருள்பாலிக்கும் ஐயப்பன்

In ஆன்மீகம்
Updated: 07:57 GMT, Dec 26, 2017 | Published: 07:25 GMT, Dec 26, 2017 |
0 Comments
1044
This post was written by : Risha
Aiyappa

சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி நேற்று (திங்கட்கிழமை) மண்டல பூஜை நடைபெற்றது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு ஐயப்பனின் அருட்கடாட்சம் பெற்றனர்.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 420 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவில் இருந்து கடந்த 22-ஆம் திகதி ஊர்வலமாக புறப்பட்டது.

நேற்று மதியம் தங்க அங்கி பம்பையை வந்தடைந்தது. பக்தர்கள் தரிசனத்துக்கு பின்னர் மாலை 3 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சந்நிதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி தீபாராதனை காட்டப்பட்டது.

தங்க அங்கியுடன் அருள்பாலிக்கும் ஐயப்பனை தரிசிக்க கடந்த 2 நாட்களுக்கு முன்பாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவியத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg