Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏகாதசி விரதங்களும் பக்தர்களுக்கு கிடைக்கும் பலன்களும்

In ஆன்மீகம்
Updated: 08:00 GMT, Dec 26, 2017 | Published: 08:00 GMT, Dec 26, 2017 |
0 Comments
1148
This post was written by : Risha
ekadashi

இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும் அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு கூறப்பட்டுள்ளது.

• சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி காமதா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி பாப மோகினி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப்பெறும்.

• வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி மோகினி ஏகாதசி என்றும், தேய்பிறை ஏகாதசி வருதித் ஏகாதசி என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைத்து இமயமலை சென்று வந்ததற்கான பலனை பெறுவார்கள்.

• ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி அபார ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

• ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி சயனி என்றும் தேய்பிறை ஏகாதசி ஏகாதசி யோகினி என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகராக பலன்கள் கிடைக்கப்பெறும்.

• ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது புத்ரஜா என்றும், தேய்பிறை ஏகாதசியானது காமிகா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.

• புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி பத்மநாபா என்றும். தேய்பிறை ஏகாதசி அஜா என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg