Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரிசி மா காரக் கொழுக்கட்டை

In
Updated: 08:53 GMT, Dec 26, 2017 | Published: 08:52 GMT, Dec 26, 2017 |
0 Comments
1136
This post was written by : Risha

தேவையான பொருட்கள்:-

அரிசி மாவு – 2 கோப்பை,

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கோப்பை,

பச்சைமிளகாய் – 2,

கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

 

செய்முறை:-
பாத்திரத்திரல் எண்ணெய் விட்டு காயவைத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.

பின்னர் பாத்திரத்தில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

அரிசி மாவை 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த மாவில் வறுத்த பருப்பு வகைகள், வதக்கிய வெங்காய கலவை, உப்பு சேர்த்து பிசைந்து சிறு சிறு கொழுக்கட்டைகளாக பிடித்து, ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும். விரும்பினால் தேங்காய்த்துருவல் சேர்க்கலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg