Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மொச்சை மசால்

In
Updated: 08:57 GMT, Dec 26, 2017 | Published: 08:57 GMT, Dec 26, 2017 |
0 Comments
1124
This post was written by : Risha

தேவையான பொருட்கள்

காய்ந்த மொச்சை – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 2
மல்லித்தூள் – அரை தேக்கரண்டி
சீரகத்தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
தேங்காய்த் துருவல் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 தேக்கரண்டி

 

செய்முறை

மொச்சையை 12 மணிநேரம் ஊறவைத்து,  பின்னர், சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதனுடன் வெங்காயம், மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இதில் வேகவைத்த மொச்சை, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.

நன்கு வெந்தவுடன் மேலே தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg