Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய கால்பந்து ஒன்றியத்தின் தலைவர் பதவி விலகல்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 13:13 GMT, Dec 26, 2017 | Published: 10:43 GMT, Dec 26, 2017 |
0 Comments
1137
This post was written by : Elakkiya

ரஷ்ய கால்பந்து ஒன்றியத்தின் தலைவர் பதவியிலிருந்து ஆறு மாதங்களுக்கு விலகுவதாக 2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு பொறுப்பான ரஷ்ய துணைப் பிரதமர் விட்டலி முட்கோ அறிவித்துள்ளார்.

மொஸ்கோவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிமன்ற நடவடிக்கைகளில் தற்போது நேரத்தை செலவிடுவதால் கால்பந்து ஒன்றியத்தின் தலைவர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று ரஷ்ய கால்பந்து நிர்வாகக் குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பாக விளையாட்டுக்களுக்கான நடுவர் நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சொச்சி ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர்களின் ஊக்கமருந்து பாவனை தொடர்பான விவகாரத்தில் அப்போது ரஷ்ய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த விட்டலி முட்கோவுக்கு ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் சபை இம்மாத ஆரம்பத்தில் தடை விதித்துள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் சபையிலிருந்து ரஷ்ய ஒலிம்பிக் சபை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்புடன் 2018 ஆம் ஆண்டு பியோங்யாங் குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்ய விளையாட்டு அமைச்சகத்திலிருந்து எந்தவொரு அதிகாரியும் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் என்றும் சர்வதேச ஒலிம்பிக் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg