Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தம் ஏனைய நாடுகளுக்கு முன்னூதாரணம்

In
Updated: 12:31 GMT, Dec 26, 2017 | Published: 12:31 GMT, Dec 26, 2017 |
0 Comments
1209
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றியத்துடனான சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்காத நாடுகளுக்கு முன்னூதாரணமாகத் திகழுமென, ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் சிக்மர் கபிரியல் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவுள்ளது. இதற்கு இரு தரப்பினர்களும் உடன்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன், பிரித்தானியா சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தத்தை எட்டினால், அது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்காத உக்ரைன், துருக்கி போன்ற நாடுகளுக்கு முன்னூதாரணமாகத் திகழும்’ என்றார்.

மேலும், துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தைக் பெற்றுக்கொள்ள விரும்புகின்றன. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த இரு நாடுகளையும் இணைப்பதில் குழப்பம் காணப்படுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg