Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆழிப்பேரலை தாண்டவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முல்லைத்தீவில் அஞ்சலி!

In இலங்கை
Published: 15:02 GMT, Dec 26, 2017 |
0 Comments
1172
This post was written by : Puvanes

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவில் இடம்பெற்றன.

முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் காலை 8 மணிமுதல் சர்வமத பிரார்த்தனையுடன் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில், சர்வமத தலைவர்கள், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபாவாதி கேதீஸ்வரன், மன்னார் நீதிபதி அலெக்ஸ்ராஜா, வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் ஆழிப்பேரலையில் சிக்கி 3000க்கும் அதிகமானவர்கள் பலியாகியிருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இதேவேளை இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg