Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னிலங்கையில் பாரிய குழப்பம்! – முக்கிய அமைச்சர்கள் பதவி விலக உள்ளனரா?

In இலங்கை
Updated: 15:20 GMT, Dec 26, 2017 | Published: 15:20 GMT, Dec 26, 2017 |
0 Comments
1474
This post was written by : Puvanes

சமகால அரசாங்கத்தில் மிகப்பெரிய குழப்பம் ஒன்று ஏற்படவுள்ளதாக ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், மத்தியவங்கியில் இடம்பெற்ற பாரிய பிணைமுறி ஊழல் தொடர்பான அறிக்கையினை விசாரணை ஆணைக்குழு வெளியிடவுள்ளது. இதன் காரணமாக அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் பதவி விலக உள்ளதாகவும் பந்துல சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சூழலில் ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும் செயற்பாடுகளையும், அதன் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் அதற்கு ஆதரவு வழங்க மறுத்துள்ள நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள பல முக்கிய அமைச்சுப்பொறுப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தன் வசப்படுத்தவுள்ளதாகவும் பந்துல மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் சிலர் ஜனாதிபதிக்கும், ஐக்கியதேசிய கட்சிக்கும் இடையில் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளதாக சித்தரிக்க முயற்சி செய்து வருகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சித் தரப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg