Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உண்மையைக் கூறியதால் இனவாதியாக மாற்றிவிட்டார்கள் : ஞானசார தேரர்

In இலங்கை
Updated: 15:52 GMT, Dec 26, 2017 | Published: 15:51 GMT, Dec 26, 2017 |
0 Comments
1176
This post was written by : Puvanes
gana001

அமைச்சர் ரிசாட் பதியூதீனை உடனடியாக அமைச்சு பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜகிரியவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

வில்பத்து தேசிய சரணாலயத்தில் மேற்கொள்ளப்படும் காடழிப்பு விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு நாம் தொடர்ந்தும் கூறிவருகின்றோம். எனினும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்தவிடயத்தை நாம் கூற முற்படும் வேளைகளில் எம்மை இனவாதியாக சித்தரித்துவிட்டனர். முஸ்லிம்களுக்கு எதிரானவர்களாக எம்மை அடையாளப்படுத்திவிட்டனர்.

வில்பத்து பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவரும் அதேசமயம், ஜனாதிபதி நியமித்த கணக்காய்வாளர் குழுவும் இந்த விடயம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

பிணை முறி மோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால் ரவி கருணாநாயக்க பதவி விலகினார். அதேபோன்று விஜயதாஸ ராஜபக்சவும் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

இதேபோன்றதொரு நிலைமை ரிசாட் பதியூதீன் விடயத்தின் ஏன் எவராலும் எடுக்கமுடியவில்லை. அவராக பதவி விலக வேண்டும் அல்லது அவரை பதவியில் இருந்து நீக்கி துரத்த வேண்டும் எனவும் ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg