Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கால்பந்து இரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு காத்திருக்கும் அதிஷ்டம்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:10 GMT, Dec 27, 2017 | Published: 05:10 GMT, Dec 27, 2017 |
0 Comments
1881
This post was written by : Anojkiyan

ரஷ்யாவில் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரின் சம்பியன் கிண்ணம், முதல் நாடாக மற்றும் முதல் முறையாக இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள வெற்றிக்கிண்ணத்தை கால்பந்து இரசிகர்கள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.

தெற்காசிய நாடுகளில் இலங்கைக்கு அடுத்து பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்குஇந்தக் கிண்ணம் கொண்டுசெல்லப்படவிருக்கின்றது.

எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணமானது சகல மக்களும் கண்டுகளிப்பதற்காக 23 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் அவ்வாறு கொண்டு செல்லப்படவுள்ள முதலாவது நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg