Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சக்க போடு போடும் ‘சக்க போடு போடு ராஜா’

In திரை விமர்சனம்
Published: 06:45 GMT, Dec 27, 2017 |
0 Comments
1138
This post was written by : Surenth
sakka podu podu raja

சென்னையில் பெரிய பணக்காரனாக இருக்கும் வி.டி.வி கணேஷின் மகன் சந்தானம். ரௌடியாக இருக்கும் சம்பத்தின் தங்கையை சந்தானத்தின் நண்பர் சேது காதலிக்கிறார். இவர்கள் காதலை பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் சந்தானம் நிறைவேற்றி வைக்கிறார். இதனால், கோபமடைந்த சம்பத், சந்தானத்தை கொல்ல முயற்சி செய்கிறார்.

இதனையடுத்து, சந்தானம் சென்னையில் இருந்தால் பிரச்சினைகள் வரும் என்று பெங்களூர் சென்று அங்கு சிலகாலம் வசிக்கிறார். அங்கு வைபவியை பார்த்தும் அவர் மீது சந்தானத்திற்கு காதல் வருகின்றது.

ஒரு சந்தர்ப்பத்தில் வைபவியும் ஏற்றுக்கொள்ள காதல் தொடர்கின்றது. இவர்களது காதல் விவகாரம் வைபவியின் அண்ணனுக்கு தெரியவர இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தானத்தை கொலை செய்ய திட்டமிடுகிறார். இதற்கிடையில் வைபவியை கொலை செய்ய வேறு ஒரு கும்பல் முயற்சி செய்கிறது.

இந்த நிலையில், இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் சந்தானம் எப்படி இந்த பிரச்சனைகளை சமாளித்தார்? நாயகி வைபவியை திருமணம் செய்தாரா? ரௌடியான சம்பத், சந்தானத்தை கொலை செய்தாரா? என்பதே திரைப்படத்தின் மீதிக்கதை…..

சந்தானம், விவேக், ரொபோ சங்கர், வி.டி.வி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், லொள்ளு சபா சுவாமிநாதன் என்று பெரிய நகைச்சுவைப் பட்டாளங்களை சேர்த்துக்கொண்டு அறிமுக இயக்குநர் ஜி.எல்.சேதுராமன் களமிறங்கியுள்ளார்.

நகைச்சுவைத் துணுக்குகளோடு கதை நகர்வதால், லொஜிக் என்ற பேச்சுக்கே இந்தத் திரைப்படத்தில் இடமில்லை. முரட்டுப் பார்வையுடனும் தடித்த உருவத்துடனும் வரும் ரௌடி சம்பத் முதல் அடியாட்கள் வரை அனைத்து பாத்திரங்களும் பக்குவம் இல்லாமல் பகடியாகவே காட்டப்படுகின்றன.

காதலிப்பதற்காக சந்தானம் மேற்கொள்ளும் கொமெடி சாகசங்கள் சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன. காதல், கொமெடி, எக்சன் என்று முப்பரிமாண பங்களிப்பை அடுத்தடுத்த காட்சிகளில் இடம்பெறச் செய்திருப்பது கொஞ்சம் திருப்தியாக இருந்தாலும், பவர் ஸ்டார் சீனிவாசன், வி.டி.வி கணேஷ் இருவரது கொமெடி காட்சிகள் தவிர வேறு எதுவும் நன்றாக அமையவில்லை.

நாயகி வைபவி படத்தின் முழுக்க வந்தாலும், அவருக்குப் பெரிதாக நடிப்பிற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. பயமுறுத்தும் ரௌடி போல முதலில் காட்டப்படும் சம்பத், கடைசியில் சிரிப்பு ரௌடி போல மாறிவிடுகிறார்.

சிம்பு இசையமைத்துள்ள முதல் திரைப்படம் என்றாலும், நன்றாக இருக்கு என்று தான் சொல்ல வேண்டும்‘காதல் தேவதை’, ‘வா முனிமா’, ‘கலக்கு மச்சான்’ ஆகிய பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன.

கொமெடி வசனங்களை குறைத்துக்கொண்டு எக்சன் கலந்த பஞ்ச் வசனங்கள், காதல், டூயட் என்று மாறுபட்ட முயற்சியில் சந்தானம் இறங்கியிருப்பதை கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும். மொத்தத்தில் சக்க போடு போட்ட ‘சக்க போடு போடு ராஜா’.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg