Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

vodafone வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய சலுகை!

In அறிவியல்
Published: 11:36 GMT, Dec 27, 2017 |
0 Comments
1153
This post was written by : Kemasiya
gyighyghyi

அதிக தொகை செலுத்தியதாக தனது வாடிக்கையாளர் மீது தொகையான 0.85 பைசாவிற்கு காசோலை அனுப்பி அதிரடித்துள்ளது vodafone நிறுவனம்.

இந்தியாவின் செல்ஃபோன் சேவையை வழங்கி வரும் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றான vodafone  நிறுவன சேவையில் இருந்து மற்றொரு நிறுவன சேவைக்கு சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் மாறியுள்ளார்.

இதன்பின்னர், vodafone  நிறுவனத்திடமிருந்து அந்த வாடிக்கையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், நிறுவனம் வழங்கிய சேவைக்கு, அதிகமான கட்டணத்தை அளித்துவிட்டதாகவும், மீதி கட்டணத்தை காசோலையாக அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காசோலையில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை பார்த்த வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. வாடிக்கையாளரின் அதிர்ச்சிக்கு அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையான 0.85 பைசா தான் காரணம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg