Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேப்பாப்புலவு மக்களின் காணிகள் நாளை விடுவிப்பு

In இலங்கை
Updated: 11:56 GMT, Dec 27, 2017 | Published: 11:41 GMT, Dec 27, 2017 |
0 Comments
1357
This post was written by : Risha

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களுக்கு சொந்தமான 132 ஏக்கர் காணிகள் நாளை (வியாழக்கிழமை) விடுவிக்கப்படவுள்ளது.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்புலவு மக்கள் இன்று 302ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆனால், காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாமல் தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

கேப்பாப்புலவிலுள்ள தங்களது 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி 138 குடும்பங்களை சேர்ந்த மக்கள் கடந்த பெப்ரவரி மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெயில், மழை, பனி என்று காலநிலையை பொருட்படுத்தாது அம்மக்கள் 300 நாட்களை கடந்து 10 மாதங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg