Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெஸ்ஸியை பின் தள்ளி சரித்திரம் படைத்தார் ஹெர்ரி கேன்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 11:58 GMT, Dec 27, 2017 | Published: 11:56 GMT, Dec 27, 2017 |
0 Comments
2103
This post was written by : Anojkiyan
nintchdbpict000374890752-e1514320314712

நடப்பு வருடத்தில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை, இங்கிலாந்து கால்பந்து அணியின் ஹெர்ரி கேன் பெற்றுக்கொண்டுள்ளார்.

நடப்பு ஆண்டில் லியோனல் மெஸ்சி, பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக 54 கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த நிலையில் இந்த வருடத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்சி இருப்பார் முதன்மை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரின், சவுதாம்டன் அணிக்கெதிரான போட்டியில், டோட்டன்ஹேம் ஸ்பர்ஸ் அணியின் ஹர்ரி கேன், மூன்று கோல்கள் அடித்ததன் மூலம் 56 கோல்கள் என்ற ஆண்டின் அதிகூடிய கோல்களை பதிவுசெய்து, மெஸ்சியை பின்னுக்கு தள்ளி சாதனைப் படைத்தார்.

நடப்பு வருடத்தில் 7வது ஹெட்ரிட் கோல் அடித்த ஹர்ரி கேன், இதுதவிர பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் ஒரே ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன்பு 1995ஆம் ஆண்டு ஆலன் சியேரெர் 36 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது 39 கோல்கள் அடித்து ஹெர்ரி கேன் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

சவுதாம்டன் அணிக்கெதிரான போட்டியில், டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணி 5-2 என கோல் கணக்கில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg