Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகர் தேர்தலின் பின்னர் தினகரன் – சசிகலா சந்திப்பு

In இந்தியா
Updated: 03:35 GMT, Dec 28, 2017 | Published: 03:35 GMT, Dec 28, 2017 |
0 Comments
1668
This post was written by : Kemasiya

ஆர்.கே.நகர். தேர்தலின் பின்னர் டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) நண்பகல் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்கும் டி.டி.வி.தினகரன், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பிற்காக நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட அவர்,  திருவண்ணாமலையில் பிரபலமான சித்தர் ஒருவரை சந்தித்து ஆசிபெற்றுள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலின் பின்னரான இவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதோடு,  ஆர்.கே.நகரின் ஆட்சி குறித்த பல்வேறு விடயங்களும் கலந்தாலோசிக்கப்படும் என, தினகரன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg