Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

In இலங்கை
Updated: 16:15 GMT, Dec 27, 2017 | Published: 15:36 GMT, Dec 27, 2017 |
0 Comments
1187
This post was written by : Ravivarman
japan-s-minister-for-administrative-reform-taro-kono-speaks-during-an-interview-in-tokyo-1

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ரறோ கனோ (Taro Kono) இலங்கைக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதியளவில் தனது விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் பிராந்தியப் பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறித்து முக்கிய அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான விஜயத்தினை முடித்துக் கொண்டு ஜனவரி 6ஆம் திகதி மாலைதீவிற்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg