Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ்.எல்.: சென்னை எப்.சி. அணியின் வெற்றியை தடுக்குமா ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி?

In உதைப்பந்தாட்டம்
Published: 09:18 GMT, Dec 28, 2017 |
0 Comments
1049
This post was written by : Anojkiyan
bengaluru-fc-jamshedpur_41e7gwqqtubs1vhqbip2gko8t

இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின், 33வது லீக் போட்டியில், ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியும், சென்னையின் எப்.சி அணியும் மோதவுள்ளன. இன்று (வியாழக்கிழமை) ஜாம்ஷெட்பூரில் இப் போட்டி நடைபெறவுள்ளது.

நடப்பு தொடரில் அசைக்க முடியாத அணியாக திகழும் சென்னையின் எப்.சி. அணி 4 வெற்றி, ஒரு சமநிலை, 2 தோல்வி என்று இதுவரை 13 புள்ளிகள் பெற்று, புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதேபோல, அறிமுக அணியான ஜாம்ஷெட்பூர் தடுப்பாட்டத்தில் பலம் மிகுந்த அணியாக விளங்குகிறது. 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 சமநிலை, ஒரு தோல்வி என்று 9 புள்ளியுடன் 6வது இடத்தில் உள்ளது.

ஜாம்ஷெட்பூர் விளையாடிய முதல் 3 போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்கப்படவில்லை. அடுத்த 3 போட்டிகளில் ஒரு கோல் தான் வெற்றி தோல்வியை தீர்மானித்தன. இதுவரை அந்த அணி 2 கோல்கள் அடித்து, ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்திருக்கிறது. அதனால் அவர்களின் தடுப்பு அரணை உடைக்க சென்னை வீரர்கள் கடுமையாக போராட வேண்டியது அவசியமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg