Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கைதிகள் பரிமாற்றத்துக்கு ஜேர்மனியும் பிரான்ஸும் வரவேற்பு

In
Updated: 12:21 GMT, Dec 28, 2017 | Published: 12:21 GMT, Dec 28, 2017 |
0 Comments
1089
This post was written by : Suganthini

உக்ரைன் அரசாங்கத்துக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதக் கிளர்ச்சியாளர்களுக்குமிடையிலான கைதிகள் பரிமாற்றத்துக்கு ஜேர்மனியும் பிரான்ஸும் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

உக்ரைன் அரசாங்கமும்; ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதக் கிளர்ச்சியாளர்களும் நூற்றுக்கணக்கான சிறைக்கைதிகளை நேற்று (புதன்கிழமை) பரிமாறியுள்ளனர்.

இதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ள ஜேர்மனி அதிபர் அங்கேலா மெர்கலும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனும், இரு தரப்பினர்களும் எஞ்சியுள்ள கைதிகளை விடுவிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜேர்மனி – பிரான்ஸ் ஆதரவில் கைச்சாகிய உடன்படிக்கையின் ஓரங்கமாக, இந்தக் கைதிகள் பரிமாற்றம் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்ததால் உண்டான மோதலையடுத்து, ஏற்பட்ட மிகப்பெரிய பரிமாற்றத்தில் இதுவும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg