Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லைபீரிய ஜனாதிபதியாக நட்சத்திர கால்பந்து வீரர் ஜோர்ஜ் வியா தெரிவு!

In
Updated: 04:33 GMT, Dec 29, 2017 | Published: 04:33 GMT, Dec 29, 2017 |
0 Comments
1621
This post was written by : Risha
jeo

லைபீரியா நாட்டின் ஜனாதிபதியாக முன்னாள் நடசத்திர கால்பந்து வீரர் ஜோர்ஜ் வியா தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

லைபீரியாவின் புதிய ஜனாதிபதித் தேர்தலில், துணை ஜனாதிபதியான ஜோசப் போக்காயை எதிர்த்து போட்டியிட்ட ஜோர்ஜ் வியா, 60 வீதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதன்படி, ஆபிரிக்காவின் முதலாவதும் ஒரே பெண் குடியரசுத்தலைவருமான எலன் ஜோன்சன் சர்லீஃபின் கைகளில் இருந்த ஆட்சி, ஜோர்ஜ் வியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

ஜோர்ஜ் வியாவின் வெற்றி அறிவிப்பை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள், தலைநகர் மன்ரோவியாவில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனது வெற்றி குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜோர்ஜ் வியா, ”இன்று நான் தழுவிய மகத்தான பணியின் முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் அளவிட்டு வருகின்றேன். நிச்சயம் மாற்றம் ஏற்படுத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜோர்ஜ் வியா, 1995ம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த கால்பந்தாட்டவீரராக விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg