Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா தொடர்பான காணொளியில் சந்தேகம் உள்ளது: ஆனந்தராஜ்

In இந்தியா
Updated: 08:49 GMT, Dec 29, 2017 | Published: 08:07 GMT, Dec 29, 2017 |
0 Comments
1512
This post was written by : Kemasiya

ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் அவரின் ஆடையை கூட சீர்செய்யாமல் எடுக்கப்பட்ட காணொளியில் சந்தேகம் உள்ளதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் நடிகர் ஆனந்தராஜ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆனந்தராஜ் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கூறிய அவர்,

“ஜெயலலிதா தனக்கு பின்னால் இருப்பதை பார்ப்பதற்கு வீடியோ எடுத்ததாக கூறுகிறார்கள். அப்படி அவர் பார்க்க வேண்டும் என கேட்ட போது கண்ணாடியில் காட்டியிருக்கலாமே? ஏன் காட்டவில்லை.

அப்படியே வீடியோ எடுத்திருந்தாலும் அதை அழிக்காமல் பக்குவப்படுத்தியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே குறித்த வீடியோ தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும். மரணத்தில் உள்ள உண்மை விபரங்களை வெளிக்கொண்டுவர வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg