Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இது எப்படி சாத்தியம்? இன்னுமொரு விருதும் ரொனால்டோ கைகளில்!

In உதைப்பந்தாட்டம்
Published: 08:13 GMT, Dec 29, 2017 |
0 Comments
1980
This post was written by : Sujitharan

போர்த்துக்கல் நாட்டின் வீரரும், ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரருமா, கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த ஆண்டின் அதி சிறந்த வீரரருக்கான கிளோப் சொக்கர் (Globe Soccer) விருதை சுவீகரித்துள்ளார்.

அதேபோல் சிறந்த பயிற்சியாளருக்கான விருதை   அதே அணியின் (ரியல் மெட்ரிட்) பயிற்றுவிப்பாளர் சினேடின் சிடேன் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

‘கிளோப் சொக்கர்’ விருது வழங்கும் விழா நேற்று டுபாயில் மிக கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் காற்பந்து உலகில் அதிஉச்ச திறமைகளை வெளிபடுத்திய மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அந்தவகையில் ரியல் மெட்ரீட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆண்டின் மிக சிறந்த வீரருக்காக வழங்கப்படும் கிளோப் சொக்கர் விருதை சுவீகரித்தார்.

அதேபோல் சிறந்த பயிற்சியாளருக்கான விருதை அதே அணியின் பயிற்றுவிப்பாளர் சினேடின் சிடேன் தனதாக்கிக் கொண்டார். 45 வயதான சினேடின் சிடேன் ரியல் மெட்ரீட் அணியின் பயிற்சியாளராக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகின்றார்.

மேலும் இந்த நிகழ்வில் பிரான்சின் பெலிக்ஸ் ப்ரைச் சிறந்த மத்தியஸ்தருக்கான விருதை தட்டிச்சென்றார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg