Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேர்லின் சிறையிலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

In ஐரோப்பா
Updated: 10:05 GMT, Dec 29, 2017 | Published: 10:03 GMT, Dec 29, 2017 |
0 Comments
1093
This post was written by : Elakkiya
pri

பேர்லின் சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. சிறைச்சாலையின் சுவரிலிருந்த துளை வழியாக நேற்று (வியாழக்கிழமை) இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

25 முதல் 38 வயதுக்கு உட்பட்ட குறித்த நால்வரும் கொள்ளை, உடல் ரீதியான தீங்கு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிறைவைக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகின்றது. இவர்களுடைய தண்டனைக் காலம் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபருக்கு இடையில் நிறைவடையும் என்றும் கூறப்படுகின்றது.

இவர்கள் எவ்வாறு தப்பிச் சென்றனர் என்பது நிச்சயமற்றதாக உள்ள போதிலும் சுவரின் துளை வழியாக ஏறிச் சென்றமை அங்கிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg