Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் நீதிமன்றத்தினால் மேலும் 17 மீனவர்கள் விடுவிப்பு

In இலங்கை
Updated: 10:14 GMT, Dec 29, 2017 | Published: 10:14 GMT, Dec 29, 2017 |
0 Comments
1220
This post was written by : Risha

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய, குறித்த மீனவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜாவினால் இன்று (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களை தாயகத்திற்கு அனுப்பி வைக்கும் நோக்கில் அவர்கள் தற்போது யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg