Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எகிப்து தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: ஐவர் உயிரிழப்பு

In உலகம்
Published: 11:29 GMT, Dec 29, 2017 |
0 Comments
1155
This post was written by : Elakkiya
201712291613404372_Egypt-church-shooting-kills-three-in-cairo_SECVPF

எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அருகில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கெய்ரோவின் தெற்கு பகுதியில் ஹெல்வான் நகரில் அமைந்துள்ள மார்மியா தேவாயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தேவாலயத்தினுள்  நுழைய முற்பட்ட ஆயுததாரியை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது ஆயுததாரி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகின்றது.

இதன்போது இரண்டு இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்பு உத்தியோத்தர்களின் துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg